சூர்யா ’சூரரைப் போற்று’ படத்தில் பாடிய ‘மாறா’ தீம் பாடல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’சூரரைப் போற்று’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த மாறா என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சூர்யா தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.

Suriya sung Soorarai Pottru GV Prakash Maara Theme song is out

காப்பான் படத்துக்குப்பிறகு சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ’இறுதிச் சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேரில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த தீம் பாடலை கேட்கும் இணைப்புகளை ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Suriya sung Soorarai Pottru GV Prakash Maara Theme song is out

People looking for online information on GV Prakash, Soorarai Pottru, Suriya will find this news story useful.