#BREAKING : சூர்யாவின் சூரரைப் போற்று - ரிலீஸ் தேதி இதுதான்... பிரபல ஹீரோவின் அதே நாளில்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் | suriya sudha kongara's soorarai pottru release date is locked in thala ajith's birthday

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சம்மருக்கு படம் வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், மே 1 அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் அதே தினத்தில் வருவதால், அஜித், சூர்யா இருவரின் ரசிகர்களுக்கும் மே 1, செம விருந்தாக அமைய போகிறது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor

சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் | suriya sudha kongara's soorarai pottru release date is locked in thala ajith's birthday

People looking for online information on Ajith Kumar, Release date, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.