சூர்யாவின் "சூரரைப்போற்று" மாஸ் அப்டேட் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் என்ஜிகே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Suriya Soorarai Potru 3rd Schedule shooting started in Madurai

இதனையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துவருகிறார். இதில் நடிகை அபர்ணா பாலமுரளி மதுரை வட்டார வழக்கு பேசும் பெண்ணாக நடித்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று மதுரை விமான நிலையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது மேலும் இம்மாத இறுதிவரை  மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ மோகன் பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Soorarai Potru 3rd Schedule shooting started in Madurai

People looking for online information on 2D Entertainment, G. V. Prakash Kumar, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.