முதல்முறையாக இந்த நாட்டில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம்! - என்.ஜி.கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியே ஓவர்சீஸ் மார்க்கெட்டில் இருந்து வந்துவிடுகிறது

Suriya' NGK the first film which releasing in Korea

அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்று தென்கொரியாவில் வெளியாகவுள்ளது. அந்த பெருமையை பெரும் படம் சூர்யாவின் 'என்.ஜி.கே. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தென்கொரியாவில் உள்ள தமிழ்சினிமா ரசிகர்கள் முதல்முறையாக ரிலீஸ் தினத்தன்றே தமிழ்ப்படம் ஒன்றை வரும் 31ஆம் தேதி பார்க்கவுள்ளனர்

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில்சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.  சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Suriya' NGK the first film which releasing in Korea

People looking for online information on NGK, Rakul Preet Singh, Sai Pallavi, Selvaraghavan, Suriya will find this news story useful.