ரஜினிகாந்த் தன்னோட கட்சியை இந்த தேதியில் அறிவிக்கப்போகிறாரா ? - அப்போ 2021 தேர்தலில்....

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்பார்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது கட்சியை நாளை அறிவிக்கப்போவதாக தகவல் | Superstar Rajinikanth may announce his political party tomorrow

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார்.  இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை நாளை (மார்ச் 12) ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்திக்கவிருக்கிறாராம்.

இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியை ரசிகர்களிடையே அறிவித்து தனது கட்சி கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரஜினிகாந்த் கட்சியை அறிவித்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினிகாந்த் தனது கட்சியை நாளை அறிவிக்கப்போவதாக தகவல் | Superstar Rajinikanth may announce his political party tomorrow

People looking for online information on Election, Rajini Makkal Mandram, Rajinikanth will find this news story useful.