வெற்றி மாறன் - தனுஷின் அசுரனை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ் ஆகியோர் கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் 'அசுரன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

Superstar Mahesh Babu Praised actor Dhanush and GV Prakash's Asuran

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், டிஜே, கென், பிரகாஷ் ராஜ், பசுபதி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மிகவும் தரமான மற்றும் மிகவும் தீர்க்கமான சினிமா வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Superstar Mahesh Babu Praised actor Dhanush and GV Prakash's Asuran

People looking for online information on Asuran, Dhanush, GV Prakash Kumar, Vetrimaaran will find this news story useful.