D40 : 'TERRIFIC டைரக்டர்.. தனுஷ் ஃபேன்ஸ்க்கு செம...' - சொல்வது சூப்பர் டீலக்ஸ் ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் படத்தில் நடித்து வரும் அஷ்வந்த் அசோக் குமார்  படத்தை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

super deluxe ashwanth shares about dhanush karthik subbaraj's D40

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படத்திற்கு D40 என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தை Y Not Studios சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்த நிலையில், அது குறித்து படத்தில் நடித்த அஷ்வந்த் அசோக்குமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'D40 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. என்னவொரு டெரிஃபிக் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். நிச்சயமாக இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்' என அவர் பதிவிட்டுள்ளார். அஷ்வந்த் அசோக்குமார் விஜய் சேதுபதியின் மகனாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Super deluxe ashwanth shares about dhanush karthik subbaraj's D40

People looking for online information on Ashwanth Ashokkumar, D40, Dhanush, Karthik Subbaraj, Suruli will find this news story useful.