VIDEO: ''சாணியில தள்ளி விட்டதுக்கு பழிவாங்காம விடமாட்டேன்'' - பிரபல டிவி தொகுப்பாளர் சபதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் மியூசிக் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்தவர் வீஜே மணிமேகலை. இனிமையான பேச்சு மற்றும் காமெடி கலந்த கலாய் இவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.

Sun Music VJ Manimegalai post funny video in Quarantine | சன் மியூசிக் வீஜே மணிமேகலை வெளியிட்ட Fun Video

தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ் என்று பல நிகழ்ச்சிகளில் முகம் காட்டிய அவர் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

தற்போது Quarantine சமையம் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் வீட்டில் செலவிடும் நேரத்தை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். மணிமேகலையும் தன் பங்குக்கு ஒரு வீடியோவை சுடச்சுட பதிவேற்றியுள்ளார். தன் தோழி ஒருவரின் கைகளை பற்றிக்கொண்டு சுழன்று விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் தடுமாறி கிழே விழுந்தார்.

குழந்தை பாங்கான இந்த விளையாட்டை சுற்றியிருந்த நண்பர்கள் படமாக்கினர். இதை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மணிமேகலை இதற்காக அடுத்த விளையாட்டில் பழிவாங்கப் போவதாக சூளுரை விடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஃபாலோவர்கள் லைக்குகளை குவித்தும், கமண்டில் காலாத்தும் கேலி செய்து விளையாடுகின்றனர்.

 

Entertainment sub editor

Sun Music VJ Manimegalai post funny video in Quarantine | சன் மியூசிக் வீஜே மணிமேகலை வெளியிட்ட Fun Video

People looking for online information on VJ Manimegalai will find this news story useful.