சிம்புவின் 'மாநாடு'க்கு தேதி குறிச்சாச்சு - தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தில் பங்கேற்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

STR, Venkat Prabhu, SJ Suryah's Maanaadu Shoot starts on February 19

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்ஜேசூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு கூறிய கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் இந்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் (19-02-2020) துவங்கப்படவிருக்கிறது. இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

STR, Venkat Prabhu, SJ Suryah's Maanaadu Shoot starts on February 19

People looking for online information on Maanaadu, Str, Yuvan Shankar Raja will find this news story useful.