capmaari 90 others

FRESH COMBO : ‘தலைவர் 168’ படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஃபர்ஸ்ட் டைம் இணையும் காமெடி ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘தலைவர் 168’ படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Soori joins the cast Superstar Rajinikanth's Thalaivar 168 directed by Siruthai Siva

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படமான ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைத்துள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காமெடி நடிகர் சூரி இணைந்து நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Soori joins the cast Superstar Rajinikanth's Thalaivar 168 directed by Siruthai Siva

People looking for online information on Rajinikanth, Soori, Sun pictures, Thalaivar 168, Veeram Siva will find this news story useful.