“மெர்சலுக்கு இல்லனா வேற எதுக்கு பார்ட்டி பண்றது?”- பிரபல நடிகர் கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வரும் மே.17ம் தேதி வெளியாகிறது.

SJ Suryah shares his sweet memory of Thalapathy Vijay's Mersal Success party

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீசையொட்டி Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா ‘மான்ஸ்டர்’, ‘நியூ’, ‘மெர்சல்’, ‘ஸ்பைடர்’ திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், மெர்சல் திரைப்படத்தின் சக்சஸ் மீட் புகைப்படத்தை பார்த்து அதன் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஈ.சி.ஆரில் நடிகர் விஜய் சக்சஸ் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை முழுவதும் மழை கொட்டித் தீர்த்த நிலையில், கொட்டும் மழையில் மெர்சல் சக்சஸ் பார்ட்டி நடந்ததாக கூறினார். ‘மெர்சலுக்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடலன்னா வேற எதுக்கு பார்ட்டி பண்றது’ என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார். ‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து அமிதாப்புடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

“மெர்சலுக்கு இல்லனா வேற எதுக்கு பார்ட்டி பண்றது?”- பிரபல நடிகர் கேள்வி வீடியோ

SJ Suryah shares his sweet memory of Thalapathy Vijay's Mersal Success party

People looking for online information on Mersal, Monster, Priya Bhavani Shankar, Sj suryah, Vijay will find this news story useful.