Game Over Others Banner USA
Fakir Others Banner USA

சிவகார்த்திகேயனின் அடுத்த மூவ் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK16' திரைப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan - Pandiraj's SK16 next schedule planned in Theni next month

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ர்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

SK16 திரைப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் தேனியில் அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan - Pandiraj's SK16 next schedule planned in Theni next month

People looking for online information on Aishwarya Rajesh, Pandiraj, Sivakarthikeyan, SK16, Sun pictures will find this news story useful.