அங்காளி பங்காளிகளுடன் செட்டிநாடு செல்லும் சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நயன்தாரா நடிக்க, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan, Pandiraj film shooting karaikudi schedule starts tomorrow

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படம் வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில்,  அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ், சூரி, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.

இந்த ப டத்துக்கு நீரவ் ஷா, ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மேலும் ஒரு அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் ஷூட்டிங், மே 14 நாளை காரைக்குடியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் காரைக்குடி செல்கிறது.

Sivakarthikeyan, Pandiraj film shooting karaikudi schedule starts tomorrow

People looking for online information on Anu Emmanuel, D Imman, Pandiraj, Sivakarthikeyan will find this news story useful.