சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி வெளியிட்ட படத்தின் டீசர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிகுமார் நடிப்பில் கதிர்வேலு இயக்கியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

sivakarthikeyan murugadoss releases sasikumar's rajavamsam teaser

அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ராஜவம்சம். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ராஜவம்சம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் ராஜவம்சம் படத்தின் டீசரை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கூட்டு குடும்பத்தின் சந்தோஷத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்லும் விதமாக படத்தின் டீசர் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி வெளியிட்ட படத்தின் டீசர் ! வீடியோ

Entertainment sub editor

Sivakarthikeyan murugadoss releases sasikumar's rajavamsam teaser

People looking for online information on AR Murugadoss, Kathirvelu, M Sasikumar, Rajavamsam, Sivakarthikeyan will find this news story useful.