''நான் ஐசியூல இல்ல, அடுத்த தடவை கொரோனா டெஸ்ட்ல நெகட்டிவ் வரும்னு நம்புறேன்'' - பிரபல பாடகி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. நோய் தொற்று ஒருபுறம் மக்கள் அச்சுறுத்த, மறுபுறம் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது. வணிகம் உள்ளிட்ட விஷயங்கள் சிதைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக நடிகை பிரபல பாடகர் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. லண்டனில் இருந்து திரும்பிய அவர் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது கனிகா தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவர் வீடு திரும்ப வேண்டும் என்றால் கொரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் வரவேண்டும். ஆனால் நான்கு முறையும் அவருக்கு பாஸிட்டிவ் முடிவே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாடகர் கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''உங்களுடன் நேசம் பகிர்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் மக்களே. உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் நான் ஐசியூவில் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். அடுத்தமுறை டெஸ்ட் செய்தால் எனக்கு நெகட்டிவ் வரும் என்று நம்புகிறேன். என் வீட்டிற்கு சென்று, என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் காண காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Singer Kanika Kapoor shares about her latest update on Coronavirus after testing positive for 4th time | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் சொன்ன அப்�

People looking for online information on Coronavirus, Kanika Kapoor, Lockdown, Singer will find this news story useful.