சிம்ரன் போட்ட வாலி பட டான்ஸ் - இருபது வருஷம் ஆனாலும், அந்த அழகும் ஸ்டைலும் இன்னும் மாறல.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சிம்ரன் தனது டிக்டாக்கில் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சிம்ரனின் வாலி டிக்டாக் | simran's vaali movie dance steps in tiktok goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர் நம்பர் ஒன் ஹீரோயினாக நீடித்து வந்தார். அண்மையில் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் சிம்ரனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே சிம்ரன் டிக்டாக் வீடியோ செய்வதை தற்போது வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அஜித் நடித்த வாலி படத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு அவர் நடனமாடும் டிக்டாக் வீடியோ வெளியானது. 20 வருடத்துக்கு முன் வெளியான வாலி படத்தில் ஆடிய அதே நடனத்தை அவர் தற்போது ஆடும் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து சிம்ரனின் வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சிம்ரனின் வாலி டிக்டாக் | simran's vaali movie dance steps in tiktok goes viral

People looking for online information on Ajith Kumar, Simran, Vaali will find this news story useful.