அடுத்த மல்டி ஸ்டாரர் படம்- சிம்புவுடன் நடிக்கப்போவது யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய மல்டி ஸ்டாரர் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Simbu's next multi starrer film to be produced by Studio green

லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.

இதனையடுத்து, சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த மல்டி ஸ்டாரர் திரைப்படம் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த மல்டி ஸ்டாரர் படத்தில் சிம்புவுடன், நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார்.

கன்னட திரைப்படமான ‘மஃப்டி’ படத்தின் இயக்குநர் நர்தன் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த மல்டி ஸ்டாரர் திரைப்படமான ‘செக்க சிவந்த வானம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, அதிதி ராவ் ஹிதாரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Simbu's next multi starrer film to be produced by Studio green

People looking for online information on Gautham Karthik, KE Gnanavel Raja - Studio Green, Simbu, Str will find this news story useful.