விஜய் சேதுபதி படத்துக்காக "WONDER WOMEN" ஆக மாறிய ஸ்ருதிஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து மேற்கத்திய இசை கான்சர்ட்களில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

Shruti Haasan turns Wonder Woman for Vijay Sethupathi's Laabam

இந்நிலையில், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ருதிஹாசன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘லாபம்’ திரைப்படம் சமூக அக்கறை கொண்டு கதைக்களத்துடன் அதிரடி ஆகஷன் படமாக உருவாகிறது. இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் வித்தியாசமான நடனத்தால் அனைவரையும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனையடுத்து, படக்குழுவினர் அவரது திறமையை பாராட்டி ‘Wonder Woman’ என அழைத்து புகழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Shruti Haasan turns Wonder Woman for Vijay Sethupathi's Laabam

People looking for online information on LAABAM, S P Jananathan, Shruti Haasan, Vijay Sethupathi, Wonder Woman will find this news story useful.