தியேட்டரில் மக்களை வரவழைக்க ஐடியா கொடுக்கும் பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கண்ணே கலாமானே' படத்துக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி தற்போது 'மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.

Seenu Ramasamy gives an idea to increase theatre audience

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், பாதி விலையில் பாப்கார்ன், பார்க்கிங் இலவசம் போன்றவை சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுகங்களின் படங்களுக்கு மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும். மேலும் நல்ல படங்கள், புதிய திறமைசாலிகளின் படங்களின் வளர்ச்சிக்கு உதவும். இது இன்றைய நாளின் எனது விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Seenu Ramasamy gives an idea to increase theatre audience

People looking for online information on Seenu ramasamy, Theatre will find this news story useful.