இந்த வயசுல என்ன ஸ்பீடு..?! - பேபி பி.டி.உஷாவாம்.. சமீரா ரெட்டி மகளுடன் க்யூட் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமீரா ரெட்டி தனது மகளுடன் செம க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

மகளுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட க்யூட் வீடியோ | sameera reddy shares a video of her daughter

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. இதையடுத்து இவர் தமிழில் வெடி, வேட்டை, அசல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக கலக்கினார். தனக்கு குழந்தை பிறந்ததையடுத்து இவர் நடிப்பத்தில் இருந்து சற்று விலகி, முழு நேர குடும்பத் தலைவியாக அசத்தி வருகிறார். தனது குழந்தையுடன் இவர் இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் இன்று ஒரு செம க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது இளையமகள் நைரா, வீட்டுக்குள் மின்னல் வேகத்தில் தவழ்ந்து ஓடும் க்யூட் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், 'பேபி பி.டி.உஷா முழு ஸ்பீடில் இருக்கிறார். முடிந்தால் பிடித்து பாருங்கள்' எனவும் பதிவிட்டிருக்கிறார். மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கும் சமீராவின் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

Entertainment sub editor

மகளுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட க்யூட் வீடியோ | sameera reddy shares a video of her daughter

People looking for online information on Coronavirus, Nyra, Sameera Reddy will find this news story useful.