''வனிதாவுக்கு பிறகு லாஸ்லியாவ தான் வெறுக்கிறேன், சில்லித்தனமா இருக்கு'' - பிரபல டான்ஸ் மாஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைகளின் காரணமாக அந்த நிகழ்ச்சி சமூகத்தில் அதிக கவனம் பெற்றுவருகிறது. குறிப்பாக வனிதா உள்ளே நுழைந்து வத்தி வைக்கத் தொடங்கியவுடன் பிக்பாஸ் வீடு ரணகளமாகியது.

Robert Speak about Kavin Losliya Kamal Haasan's Bigg boss 3

எல்லோரும் வனிதா சிறப்பு விருந்தினராக மட்டுமே உள்ளே நுழைந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில் அவர் வைல்ட் கார்டு என்ட்ரி என்று பிக்பாஸ் அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில் வனிதா குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''பிக்பாஸ் முழுக்க டிராமா தான்.  ஏன்னா வனிதாவ யாரு வெளியே அனுப்புனது? மக்கள்.  ஆனா திரும்ப கொண்டுவந்தது யாரு மக்களா ? பிக்பாஸ் தான். அப்போ நாம போட்ட ஓட்டு எல்லாம் வேஸ்ட்.

வனிதாவுக்கு பிறகு நான் வெறுக்குற ஆள் லாஸ்லியா தான். அந்த பொண்ண எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். வெளியே வந்ததும் ஒரு படத்துக்காக பேசலாம்ணு இருக்கோம். ஆனா மதுமிதா விவகாரத்தில் அந்த பொண்ணு பசங்க பக்கம் பேசுனது கடுப்பா இருந்தது.

ஷெரின் டீஸன்ட்டான வனிதா. தர்ஷனும் அந்த மாதிரி தான். லாஸ்லியா கவினுக்கு இடையே லவ் இருக்கு. அது பச்சையா தெரியுது.  அவங்க பன்றது சில்லித்தனமா இருக்கு'' என்றார்.

''வனிதாவுக்கு பிறகு லாஸ்லியாவ தான் வெறுக்கிறேன், சில்லித்தனமா இருக்கு'' - பிரபல டான்ஸ் மாஸ்டர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Robert Speak about Kavin Losliya Kamal Haasan's Bigg boss 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Kavin, Robert will find this news story useful.