அகில உலக சூப்பர் ஸ்டாரின் சுமோ ஷூட்டிங் ஸ்பாட் படத்தை பகிர்ந்த பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் கடந்த வருடம் வெளியான தமிழ் படம் 2 திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிஎஸ் அமுதன் இயக்க, சதீஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Rajiv Menon shares Shiva's Sumo shooting spot picture

இதனையடுத்து சிவா நடித்து வரும் படம் 'சுமோ'. இந்த படம் ரெஸ்ட்லிங் விளையாட்டை மையமாக வைத்து உருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'பிப்ரவரி 14' பட இயக்குநர் ஹோசிமின் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு சிவா கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளாராம். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராஜீவ் மேனன், இரண்டு சுமோ வீரர்கள் பயிற்சிக்காக மோதிக்கொள்கின்றனர். அவர்களின் வேகம், சக்தி  ஆகியவை தூண்டுகோலாக இருந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajiv Menon shares Shiva's Sumo shooting spot picture

People looking for online information on Rajiv Menon, Shiva, Sumo will find this news story useful.