BREAKING: ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போன்னு தெரியுமா… படக்குழு வெளியிட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி என்று ஒரு நடசத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இமான் ரஜினியோடு கூட்டணி சேர்கிறார்.

Rajinikanth Siva Annaatthe will be out on Pongal | சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த 2021 பொங்கலுக்கு வெளியாகும்!

முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் கொரோனா பரவியதால் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் படத்தில் ரிலீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளது.

2021 பொங்கல் விருந்தாக அண்ணாத்த திரைக்கு வரும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Siva Annaatthe will be out on Pongal | சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த 2021 பொங்கலுக்கு வெளியாகும்!

People looking for online information on Annaatthe, Keerthy Suresh, Kushboo Sundar, Meena, Nayanthara, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.