Fakir Others Banner USA

‘அட நானும் உங்கள மாதிரி தான் பா...’- ‘தளபதி 63’ அப்டேட் பற்றி தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் அப்டேட் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Producer Archana Kalpathi says, Thalapathy 63 update will happen when the time is right

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் பற்றிய எவ்வித அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தளபதி 63 அப்டேட் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நேரடியாக தயாரிப்பாளரிடமே அப்டேட் எப்போ வரும் என கேள்வி எழுப்பி வருகின்றன்ர்.

இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தயாரிப்பாளர்களிடம் அப்டேட் கேட்பதில் நானும் உங்களை மாதிரி தான் என்பதை மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தீவிரமாக பணியாற்றி வருகிறோம்’ என ட்வீட் செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Producer Archana Kalpathi says, Thalapathy 63 update will happen when the time is right

People looking for online information on AGS Entertainment, Atlee, Nayanthara, Thalapathy 63, Vijay will find this news story useful.