Godavari News Banner USA
Game Over Others Banner USA
Fakir Others Banner USA

‘ரஜினிக்கு ஃப்ரெண்ட், நயனுக்கு அங்கிள்...’- முருகதாஸிடம் சான்ஸ் கேட்கும் ஹாலிவுட் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் சான்ஸ் கேட்டு ட்வீட் செய்திருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Popular Hollywood actor Bill Duke express his interest to act as Rajinikanth's American friend in Darbar

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டியூக் வாய்ப்புக் கேட்டு ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘முருகதாஸ் எனக்கு தமிழ் பேச தெரியாது. ஆனால், ரஜினியின் நீண்ட கால நண்பனாகவோ, அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் அங்கிளாகவோ நான் நடிக்கலாம் என்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத், சந்தோஷ் சிவன் என்னை எடிட் செய்யலாம், அனிருத் எனக்கு ஒரு ஹிட் சாங் கொடுக்கலாம்.. என்ன சொல்றீங்க?’ என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சான்ஸ் கேட்டுள்ளார்.

பில் டியூக்கின் இந்த ட்வீட்டை நம்ப முடியாத முருகதாஸ், ‘சார் இது நிஜமாவே நீங்க தானா?’ என்று கேட்டதற்கு, ‘ஆமாம் சார். நானும் எனது டீமும் உங்களது பணியின் தீவிர ரசிகர்கள். எனக்கு இப்போ 76 வயதாகிறது. நிக்கோலஸ் கேஜுடன் ‘தி மூவி மேண்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் இணைந்து பணியாற்றலாம்’ என பில் டியூக் கூறியுள்ளார்.

நடிகர் பில் டியூக், ‘கமாண்டோ’, ‘பிரிடேட்டர்’, எக்ஸ்-மெந்தி லாஸ் ஸ்டாண்ட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், மிகவும் பிரபலமான அமெரிக்க சீரிஸான ‘தி ட்விலைட் ஜோன்’, ‘அமெரிக்கன் பிளேஹவுஸ்’ உள்ளிட்டவைகளில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின்போது, ‘ஒரு சர்வதேச ஸ்பை த்ரில்லர் படத்தில் இணைந்து பணியாற்றலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது சொல்லுங்கள் லன்ச் சேர்ந்து சாப்பிடலாம்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular Hollywood actor Bill Duke express his interest to act as Rajinikanth's American friend in Darbar

People looking for online information on AR Murugadoss, Bill Duke, Darbar, Hollywood Actor, Nayanthara, Rajinikanth will find this news story useful.