தற்கொலை செய்துகொண்ட பிரபல இயக்குநர் - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரானா வைரஸ் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க, இந்த லாக்டவுன் நேரத்தில் திரையுலக பிரபலங்கள் மறைவு செய்திகளும் மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, இயக்குநரும் நடிகருமான விசு, நடிகரும் மருத்துவருமான சேது, பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் கடந்த ஒரு மாத காலத்தில் நம்மை விட்டு மறைந்துள்ளனர்.

Popular Director John Lufia commits suicide | பிரபல இயக்குநர் ஜான் லூஃபியா தற்கொலை

இதனையடுத்து மறைந்த பிரபலங்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்தும் கட்டுரை எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மேலும் ஒரு செய்தி நமக்கு கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளரும் இயக்குநருமான ஜான் லாஃபியா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஜான் லாஃபியா சைல்ட்ஸ் ப்ளே என்ற புகழ் பெற்ற படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Popular Director John Lufia commits suicide | பிரபல இயக்குநர் ஜான் லூஃபியா தற்கொலை

People looking for online information on John Lufia, Lockdown, Suicide will find this news story useful.