கொரோனா நோய் தொற்றால் பரிதாபமாக பலியான நடிகை... சோக செய்தியை உறுதி செய்த பேரன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களும் வீட்டில் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே இந் நோயை ஒழிப்பதற்கான தற்போதைய ஒரே வழி என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

கொரோனா நோய் தொற்றால் பரிதாபமாக பலியான நடிகை Popular Actress Dies Due to Corona Complications

இந்நிலையில் இந்த நோய் பல பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டன் நடிகை ஹிலாரி ஹீத் இந்நோயினால் தற்போது மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை பேரன் அலெக்ஸ் வில்லியம்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

ஹிலாரி ஹீத்திற்கு வயது 74. நடிகையாக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து இருக்கிறார். 1945 ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது அப்போதைய கணவருடன் சேர்ந்து Duncan Health Associates என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். தனது மகன், மகளுடன் சேர்ந்து வசித்து வந்த அவர் கொரோனா நோயினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா நோய் தொற்றால் பரிதாபமாக பலியான நடிகை Popular Actress Dies Due to Corona Complications

People looking for online information on Corona, Covid19, Death, Hilary Heath will find this news story useful.