மூடர்கூடம் நவீன் ஏன் அவர் பொண்ணுக்கு இந்த பெயரை வைத்தார் தெரியுமா.? இதுதான் காரணமாம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூடர்கூடம் நவீன் தனது மகளின் பெயர் காரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தனது மகளின் பெயர் காரணத்தை சொன்ன மூடர்கூடம் நவீன் | mooodar koodam naveen opens on his daughter name reason

மூடர்கூடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். இத்திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். இதையடுத்து இவர் அலாவுதினின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் அருண் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோரை வைத்து அக்னி சிறகுகள் என்கிற படத்தை இயக்கியும் வருகிறார். 

இந்நிலையில் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புரட்சியாளர் லெனின் நினைவை போற்றும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று. தோழருக்கு செவ்வணக்கங்கள். அவர் நினைவாக என் கடைக்குட்டிக்கு ‘லெனி’ என்று பெயரிட்டேன். என் லெனி மானுட சமத்துவத்திற்காக வாழும், ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என்பது விருப்பம்'' என தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor

தனது மகளின் பெயர் காரணத்தை சொன்ன மூடர்கூடம் நவீன் | mooodar koodam naveen opens on his daughter name reason

People looking for online information on Daughter, Lenin, Moodar Koodam, Naveen will find this news story useful.