Game Over Others Banner USA
Fakir Others Banner USA

தனுஷ் படத்தில் இணைந்த விஜய் தேவரகொண்டா ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் படத்தில் பிரபல நடிகை புதிதாக இணைந்துள்ளார்.

Mehreen Pirzada joins Dhanush - Durai Senthilkumar's untitled film under Sathya Jyothi films banner

‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். ‘தொடரி’ திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்-தனுஷ் கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு பின்13 ஆண்டுகள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்நிலையில், தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய் தேவரகொண்டாவுடன் ‘நோட்டா’ ஆகிய திரைப்படங்களில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா தனுஷ் படத்தில் புதிதாக இணைந்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் குற்றாலத்தில் தொடங்கியது. இந்த படம் மட்டுமல்லாது தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mehreen Pirzada joins Dhanush - Durai Senthilkumar's untitled film under Sathya Jyothi films banner

People looking for online information on Dhanush, Durai senthilkumar, Mehreen Pirzada, Sathya Jyothi Films, Sneha will find this news story useful.