"இந்த விஷயம் சினிமா துறையில் ரொம்ப..." - கௌதம் மேனன் குறித்து எமோஷனல் ஆன பிரபல இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை மேகா ஆகாஷ் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

கௌதம் மேனன் குறித்து மேகா ஆகாஷ் | megha akash emotional over gautham menon on his birthday

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வின்னைதாண்டி வருவாயா உள்ள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இவர் அண்மையில் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே இன்று கௌதம் மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு, பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் கௌதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'நாம் இருக்கும் இந்த துறையில் ஒரு ஃப்ரென்ட் கிடைப்பது அறிய விஷயமானது. அதிலும் படம் முடிந்தும் அந்த நட்பு தொடர்வது அறிதிலும் அறிது. ஆனால் நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு வழிகாட்டியாக, ஃப்ரென்டாக, குடும்பத்தில் ஒருத்தராக நீடித்து வருகிறீர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். மிகவும் உண்மையாக இருப்பதற்கு நன்றி' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

கௌதம் மேனன் குறித்து மேகா ஆகாஷ் | megha akash emotional over gautham menon on his birthday

People looking for online information on Enai Noki Paayum Thota, Gautham Menon, Megha Akash will find this news story useful.