அனிருத், யுவனுடன் மீரா மிதுன் வெளியிட்ட போட்டோ... இதை எடுத்தது பிரபல இயக்குனர் தானாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாகவே அவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது.

அனிருத், யுவனுடன் மீரா மிதுன் வெளியிட்ட பார்ட்டி போட்டோMeera mithun shares throwback picture with anirudh and yuvan shankar raja

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும். அவர் தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். ஆனாலும் அவர் பகிரும் சில புகைப்படங்கள்  பரபரப்பு ஏற்படுத்துகின்றது. அப்படி நித்தியானந்தாவின் புத்தகம் பற்றிய பதிவு,  அதன் பின்பு விஜய்யின் மாஸ்டர் போஸ்டர் தன்னை பார்த்து காப்பியடித்தது என்று வேடிக்கையாக கூறியது போன்றவற்றை சொல்லலாம்.

சமீபத்தில் அனிருத் மட்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை எடுத்தவர் என்று சொல்லி இயக்குனர் வெங்கட்பிரபுவை டேக் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களுடன் மீரா மிதுன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

அனிருத், யுவனுடன் மீரா மிதுன் வெளியிட்ட பார்ட்டி போட்டோMeera mithun shares throwback picture with anirudh and yuvan shankar raja

People looking for online information on Anirudh, Meera Mithun, Party photo, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.