இயக்குநர் அட்லி படம் குறித்து 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லி தனது ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்து அறிவித்தார். அதன் படி 'அந்தகாரம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  வி விஞாராஜன் இயக்க, பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அந்தகாரம்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த படம். விஞாராஜன் சகோ, உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். செம பெர்ஃபார்மன்ஸ் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன். வாழ்த்துகள் அட்லி சகோ. உங்கள் கையில் ஒரு வெற்றியாளர்'' என்று பாராட்டியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Master fame Lokesh Kanagaraj comments about Atlee's Andhaghaaram movie | அட்லியின் அந்தகாரம் படம் குறித்து மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கன�

People looking for online information on Andhaghaaram, Arjun Das, Atlee, Lokesh Kanagaraj will find this news story useful.