#BREAKING : சிம்புவின் மாநாடு ஸ்டார்... இன்று கடைசி நாள் ஷூட்டிங்! - படத்தை பற்றிய EXCLUSIVE தகவல் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து வரும் ப்ரேம்ஜியின் பெயரிடப்படாத படம் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.

மாநாடு ப்ரேம்ஜி படத்தின் தகவல் | maanaadu premji suresh sangaiah movie shoot details

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி ப்ரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பதிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ப்ரேம்ஜி தற்போது நடித்து வரும் திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. ஒரு கிடாரியின் கருனை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கய்யா இயக்கும் படத்தில் தற்போது ப்ரேம்ஜி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் இன்றோடு முடிவடைவதாக கூறப்படுகிறது. சென்னையில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் இப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஆட்டோசங்கர் வெப் தொடரில் நடித்த ஸ்வயம்சித்தா ஹீரோயினாக நடிக்கும் இத்திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாநாடு ப்ரேம்ஜி படத்தின் தகவல் | maanaadu premji suresh sangaiah movie shoot details

People looking for online information on Maanaadu, Premji Amaran, Simbu, Str, Suresh Sangaiah will find this news story useful.