Fakir Others Banner USA

சிப்பாயாக மாறி காப்பாற்ற வேண்டும் - விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்த இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜுன் 28ம் தேதி “தர்மபிரபு, ஹவுஸ் ஓனர், நட்சத்திர ஜன்னலில், காதல் முன்னேற்ற கழகம், ஜீவி” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Lakshmy Ramakrishnan's request to Vijay Sethupathi Sindhubaadh

அவற்றுடன் ஜுன் 21ம் தேதி வெளியாவதாக இருந்த 'சிந்துபாத்' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் வெளியாக உள்ள அனைத்து படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். அவற்றுடன் 'சிந்துபாத்' படம் வெளியானால் அந்தப் படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும். மேலும், விஜய் சேதுபதி நடித்த படம் என்பதால் 'சிந்துபாத்' படத்தைப் பார்க்கத்தான் ரசிகர்களும் ஆர்வம் காட்டுவார்கள்.

எனவே, அன்றைய தினம் 'சிந்துபாத்' படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என 'ஹவுஸ் ஓனர்' படத்தை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “பெரிய படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்,” என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Lakshmy Ramakrishnan's request to Vijay Sethupathi Sindhubaadh

People looking for online information on , House, House Owner, Lakshmy Ramakrishnan, Sindhubaadh, Vijay Sethupathi will find this news story useful.