#SHOCKING : சிம்ரனா இது...?? இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களின் கனவுக்கன்னி நடிகை சிம்ரனுக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடனம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நடிப்பு ராட்சஷியாய் தமிழ் சினிமாவை கட்டிப் போட்டவர் சிம்ரன்.

சிம்ரன் பகிர்ந்த வித்தியாசமான டான்ஸ் வீடியோ l Simran Shares A Dance Video And Fans Go Shocked

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு குட் பை சொன்ன சிம்ரன் திரும்ப செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களம் இறங்கினார். அப்படி அவர் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் உடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் " இது தான் என்னுடைய 'Stress Buster' " என்று தலைப்பிட்டுள்ளார். அவர் டான்ஸ் ஆடும் அந்த வீடியோவில் அவரது ஸ்டைல் வேற லெவலில் இருக்கிறது. வெளிநாட்டு பெண் போல் உடையணிந்து அவர் ஆடும் டான்ஸ் செம ரகம். இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம சிம்ரனா இது. அடையாளமே தெரியலையே" என்று ஷாக் ஆகி உள்ளனர். எது எப்படியோ வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை.

 

Entertainment sub editor

Tags : Simran

சிம்ரன் பகிர்ந்த வித்தியாசமான டான்ஸ் வீடியோ l Simran Shares A Dance Video And Fans Go Shocked

People looking for online information on Simran will find this news story useful.