தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Kiara Advani to act in Thalapathy Vijay and Anirudh's Thalapathy 64

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் எம்.எஸ்.தோனி, கபீர் சிங், வினய விதய ராமா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Kiara Advani to act in Thalapathy Vijay and Anirudh's Thalapathy 64

People looking for online information on Anirudh Ravichander, Kiara Advani, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.