''கொரோனா ஷூட்டிங்கினால் தான் பரவுச்சுனு சொல்ல 100 பேரு காத்துட்டிருக்காங்க.. - பிரபலங்கள் சாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் பல்வேறு வணிக செயல்பாடுகளை பாதித்து வருகிறது. மருத்துவர்கள் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்பும் ரீலிஸ் தேதி ஆகியவை மாற்றப்படும் என்று கூறப்பட்டது.

கொரோவினால் திரைப்பட, டிவி ஷூட்டிங்கை நிறுத்துவது குறித்து குஷ்பு, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே | Khushbu

ஆனால் தமிழகத்தில் இதற்கான அறிவிப்பும் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு பேசியதாவது, ''நான் இப்போ இயக்குநர் செல்வமணி சாரிடம் பேசினேன். ஏன்னா மற்ற எல்லா மொழிகளிலும் ஷூட்டிங் நிறுத்திவச்சுருக்காங்க.

என்னோட தெலுங்கு டெலிவிஷன் ஷூட் கேன்சலாகிருக்கு. கண்டிப்பாக ஷூட்டிங் நிறுத்த போறோம். இது தொடர்பாக அறிக்கை வெளியாகும். அது ஒரு வாரகாலமாக இருக்கலாம், 10 நாட்களாக இருக்கலாம், மார்ச் 31 வரை இருக்கலாம். ஷூட்டிங்கில் ஒருத்தருக்கு வந்துச்சுனா. எல்லோருக்கும் வரும். சினிமா ஷூட்டிங்னால தான் பரவுச்சுனு சுட்டிக் காட்ட 100 பேர் காத்துட்டு இருக்காங்க. கண்டிப்பா நாளைல இருந்து ஷூட்டிங் இருக்காது'' என்றார்.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பேசும்போது, ''கொரோனா பாதிப்பினால் மற்ற மொழிகளில் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தவிர. குஷ்பு மேடம் இதுகுறித்து தெரிவித்திருந்தாங்க. மேலும் நிறைய தயாரிப்பாளர்கள் இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். காரணம் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதில் உள்ள சிக்கல், செட் போட்டுருந்தாங்கனா அந்த செட்டுக்கு தேவையில்லாம வாடகை வரும், ஃபினான்ஸ் வாங்கிருந்தாங்கனா அது பாதிக்கும். ஆனால் நிச்சயம் அதற்கு ஒரு தீர்வு காணலாம்.

இதனை சரி செய்வதற்கு நடிகர் நடிகர்களிடம் கால்ஷீட் குறித்து உதவக் கேட்கலாம். செட் போட்டுருந்தாங்கனா அதற்கான வாடகையை சார்ஜ் பண்ண வேணாம்னு கேட்கலாம். எல்லாம் சாத்தியம் தான். தொழிலை விட உயிர் ரொம்ப முக்கியம். சீக்கிரம் இது சரியாகும் என்று நம்புறோம் என்றார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோவினால் திரைப்பட, டிவி ஷூட்டிங்கை நிறுத்துவது குறித்து குஷ்பு, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே | Khushbu

People looking for online information on Corona, J Sathish Kumar, Kushboo Sundar, Kushbu, Shooting will find this news story useful.