Game Over Others Banner USA
Fakir Others Banner USA

பிறந்தநாள் ஸ்பெஷல் : மீண்டும் தியேட்டரில் தளபதி விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால்  தளபதி என அழைக்கப்படுபவர் விஜய். இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை திரையிடவிருப்பதாக திரையரங்குகள் அறிவித்துள்ளன.

Kaththi and Pokkiri Screened for Thalapathy Vijay's Birthday Special

வெற்றி திரையரங்கின் மேலலானமை இயக்குநர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜீன் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய்யின் 'போக்கிரி' திரையிடப்படவிருப்பதாக அறிவித்தார். அவரது மற்றொரு பதிவில் டிக்கெட்டுகள் வேகமாக புக் செய்யப்ட்டுவருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான 'கத்தி' திரைப்படத்தையும், போக்கிரி திரைப்படத்தையும் திரையிடவிருப்பதாகவும் அதற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 

 

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகிபாபு என ஒரு நட்சித்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துவருகின்றனர்.

 

Kaththi and Pokkiri Screened for Thalapathy Vijay's Birthday Special

People looking for online information on Kaththi, Pokkiri, Thalapathy, Thalapathy 63, Vijay will find this news story useful.