ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கார்த்திக் சுப்பராஜ் - ''இப்ப இல்லனா எப்பவும் இல்ல''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களை அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என்னை முதலமைச்சர் வேட்பாளராக நினைத்து பார்க்க முடியவில்லை. ஆட்சி பொறுப்பு வேற கட்சி பொறுப்பு வேற.

கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார் | Karthi

நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். வாக்குகளை பிரிக்க நான் வரவில்லை'' என்று பேசினார். தற்போது இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த்தின் முடிவிற்கு ஆதரவாக கருத்துகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ''தெளிவான பார்வை, புது கொள்கை, தன்னிலமற்ற தன்மை, இதயத்தில் இருந்து வெளிப்படையாக... இது தான் தலைவரின் அரசியல். சிறப்பான பேச்சு தலைவா. அரசியல் மாற்றத்துக்கான எங்களின் நம்பிக்கை. இப்ப இல்லைனா எப்பவும் இல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார் | Karthi

People looking for online information on Karthik Subbaraj, Rajinikanth will find this news story useful.