NKP Others Banner USA

சிவகார்த்திகேயன் இயக்குநருடன் கார்த்தி இணையும் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேவ் படத்துக்கு பிறகு கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் கைதி. மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Karthi and Rashmika's Sultan shooting happpened in Dindugal

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் 'அஞ்சாதே' நரேன், விஜய் டிவி தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கிறார். சுல்தான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டியர் காம்ரேட் புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இது கார்த்தியின் 19வது படமாகும். இந்நிலையில் இந்த படம் குறித்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன் படி இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கலில் இன்று இரவு தொடங்கி, தொடர்ந்து 7 நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து பகலில் நடைபெறுமாம்.

மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பிற்காக செட் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் மற்றும் லால் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விருக்கின்றனர்.

Karthi and Rashmika's Sultan shooting happpened in Dindugal

People looking for online information on Karthi, Rashmika Mandanna, Sultan will find this news story useful.