கார்த்தியும் தளபதி 64 இயக்குநரும் இணைந்துள்ள 'கைதி' படத்தின் CENSOR விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று (October 7 ) வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

Karthi and Lokesh Kanagaraj's Kaithi Censored as UA

இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குநராக பணிபுரிகிறார். இந்த படத்தில் நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கிவருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthi and Lokesh Kanagaraj's Kaithi Censored as UA

People looking for online information on Kaithi, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.