''நடிப்பை பார்த்து பிரமிச்சு போயிருக்கேன்..'' - பிரபல நடிகரின் மரணம்.. கமல் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் இர்ஃபான் கான் மரணத்திற்கு நடிகர் கமல் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். 

இர்ஃபான் கான் மரணம் கமல் உருக்கம் | kamall hassan condolences for actor irrfan khan's death

பாலிவுட் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர் இர்ஃபான் கான். தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் இவர். அவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படங்களான 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜூராஸிக் பார்க்', 'அமேசிங் ஸ்பைடர் மேன்' ஆகியவை மூலம் உலக அளவில் மிகவும் பரீட்சையமானார். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

இதையடுத்து நடிகர் கமல் அவரது மரணத்துக்கு உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ரொம்ப சீக்கிரமாகவே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் நடிப்பை பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். நான் பார்த்ததில் மிகச்சிறந்த நடிகர் நீங்கள். இன்னும் நீண்ட நாட்கள் நீங்கள் வாழ்ந்திருக்கலாம்'' என அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா நட்சத்திரங்களும் இர்ஃபான் கான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

இர்ஃபான் கான் மரணம் கமல் உருக்கம் | kamall hassan condolences for actor irrfan khan's death

People looking for online information on Irrfan Khan, Kamal Haasan will find this news story useful.