‘மக்கள் HAPPY நாங்க HAPPY..’ - கேக் வெட்டி கொண்டாடிய ‘கோமாளி’ டீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கோமாளி’ திரைப்படம் கடந்த ஆக.15ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Jayam Ravi's Comali team celebrating the success of the film

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மக்களிடம் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் விதமாக ‘கோமாளி’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல் நாள் இன்று.. மக்கள் செம்ம ஹாப்பி.. அதனால நாங்க எல்லாரும் ஹாப்பி..’ என்று கோமாளி டீமுடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

Jayam Ravi's Comali team celebrating the success of the film

People looking for online information on Comali, Jayam Ravi, Kajal Agarwal, Pradeep Ranganathan will find this news story useful.