சீயான் விக்ரம் படத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் 'கடாரம் கொண்டான்'. உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக இந்த படத்தை தயாரிக்க, ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Irfan Pathan to act in Vikram, Ajay Gnanamuthu, AR Rahman's Movie

இதனையடுத்து சீயான் விக்ரம், 'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி இந்த படத்தில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Irfan Pathan to act in Vikram, Ajay Gnanamuthu, AR Rahman's Movie

People looking for online information on Ajay Gnanamuthu, AR Rahman, Irfan Pathan, Vikram will find this news story useful.