Fakir Others Banner USA

ஆஹா! ஓ ஹோ!! - சென்னையில் மழை, தளபதி பர்த்டே செம்ம - ஆல் ரவுண்டர் அஸ்வின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தனது 45வது பிறந்தநாளை நாளை (ஜூன்.22) கொண்டாடவிருப்பதையொட்டி, சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

Indian off-spinner Ashwin Ravichandran tweeted about Thalapathy Vijay's Birthday and Chennai Rains

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (ஜூன்.21) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி, ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த ஹேஷ்டேக்குகளையும், விஜய்யின் பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேக்குகளையும் சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும், தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ‘காலையில் ரேடியோ கேட்டேன். அப்போது தளபதி பிறந்தநாளும், சென்னை மழையும் சம அளவில் இருப்பதை கண்டுபிடித்தேன். நடிகர் விஜய்க்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள். வார இறுதியை மகிழ்விக்க வந்திருக்கும் சென்னை மழைக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்தரும் தளபதி ரசிகர் தான் என்ற சந்தோஷத்தில் அவரது ட்வீட்டை விஜய் ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

Indian off-spinner Ashwin Ravichandran tweeted about Thalapathy Vijay's Birthday and Chennai Rains

People looking for online information on Ashwin Ravichandran, Chennai rains, Indian Cricketer, Thalapathy 63, Vijay will find this news story useful.