Charminar Desk News US

வெற்றிமாறன்-சூர்யா திரைப்படத்தில் இருந்து அசுரத்தனமான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன் அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

GV Prakash Kumar composes music for Suriya 40 directed by Vetrimaaran

இதைத் தொடர்ந்து அவர் சூர்யாவின் 40வது படத்தை இயக்க உள்ள செய்தி உறுதி செய்யப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு வி கிரியேஷன்ஸ் சார்பில் சார்பில் தயாரிக்கிறார்.

விரைவில் தொடங்க உள்ள இந்த ப்ராஜக்டுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என்று வெற்றிமாறனின் பெரும்பாலான படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமாரின் 75வது படம் என்பது குறிப்பிடத் தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Kumar composes music for Suriya 40 directed by Vetrimaaran

People looking for online information on GV Prakash Kumar, Suriya, Vetrimaaran will find this news story useful.