கொரோனா அச்சுறுத்தல்... பொருட்படுத்தாது மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நாளை (23-03-2018) காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகாந்த்தின் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது மாஸ்க் அணிந்து தி�

People looking for online information on Coronavirus, Janata curfew, Premalatha Vijayakanth, Vijayakanth will find this news story useful.