'மாஸ்டர்' வாத்தி கமிங் பாடல் - கியூட்டாக டான்ஸாடும் பிரபல இயக்குநரின் மகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பட பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பிரபலங்கள், ரசிகர்கள் என  மாஸ்டர் பாடலுக்கு நடனமாடும் டிக் டாக் வீடியோ சமீப காலங்களில் டிரெண்டாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 'ஆடை', 'மேயாத மான்' படங்களின் இயக்குநர் ரத்ன குமார் தனது மகள் வாத்தி கமிங் பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குநர் ரத்னகுமார் 'மாஸ்டர்' பட வசன கர்த்தாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தின் எடிட்டிங் மற்றும் பின்னணி இசையமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விஜய தசமி  அல்லது தீபாவளி ஆகிய தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Director Rathnakumar's daughter dancing to Thalapathy vijay's Master song - தளபதி விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு இயக்குநர் ரத்னகுமாரின் மகள் �

People looking for online information on Anirudh, Master, Vathi Coming, Vijay, Vijay Sethupathi will find this news story useful.