EXCLUSIVE : நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படம்.... என்ன கதை...யார் தயாரிப்பாளர்... அதிரடி தகவல்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது அசாத்திய படைப்புகளால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் இயக்குனர் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கியசூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்கள் இன்றும் அப்ளரது பேவரைட் படங்கள். அதேபோல் இவர் ஜிகர்தண்டா, பிட்சா, எனக்குள் ஒருவன்  எனக்குள் ஒருவன் போன்ற படங்களும்மிகப் பெரிய ஹிட் அடித்தன. புகழ்பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தின் எழுத்தாளரும் இவர்தான்.

நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படம் என்ன கதை Director Nalan kumarasamy next film will be in this genre

இந்நிலையில் நலன் குமாரசாமி தனது அடுத்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை நமது BEHINDWOODS சேனலுக்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதாவது அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க உள்ளாராம். இரண்டு படங்களையுமே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதில் ஒன்று ஆக்ஷன் கலந்த மசாலா படமாகவும் மற்றொன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்றும் நலன் குமாரசாமி கூறியுள்ளார். மேலும் சூது கவ்வும் 2 இயக்கும் ஐடியா இப்போ இல்லை. ஆனாலும் எதிர்காலத்தில் பண்ணுவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவரது கடந்த கால படைப்புகள் கொடுத்த நம்பிக்கையில் ரசிகர்கள் அவரது அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Entertainment sub editor

நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படம் என்ன கதை Director Nalan kumarasamy next film will be in this genre

People looking for online information on , Director, Film, Nalan Kumarasamy, Next project, Soodhu Kavvum will find this news story useful.