Game Over Others Banner USA
Fakir Others Banner USA

துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhruv Vikram Starring Adithya Varma teaser will be releasing on June 16

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அமோக வெற்றிப்பெற்றதையடுத்து, இப்படத்தை ‘வர்மா’ என்ற தலைப்பில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் இறுதி பிரதி திருப்தி அளிக்காததால், அதனை கைவிடுவதாக தயாரிப்பாளர்கள் குழு தரப்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரீஸய்யா இயக்கத்தில் புதிய குழுவுடன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் ரீ-ஷூட் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வருன் ஜூன்.16ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Dhruv Vikram Starring Adithya Varma teaser will be releasing on June 16

People looking for online information on Adithya Varma, Arjun Reddy, Banita Sandhu, Dhruv will find this news story useful.